ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இதன் அறிவியல் பெயர் ஸ்பான்டியஸ் டல்சிஸ் ஆகும். இதில் பல்வேறு மருத்துகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இம்மரத்தின் இலைகளும் பட்டையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக வயிற்றழைச்சல், தொண்டை வலி, இருமல், கண்ணில் ஏற்படும் நோய்தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைக்கு அம்பரலங்காய் பயன்படுகிறது.

தற்போது இதில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

தேவையானவை

அம்பரலங்காய் – தோல் நீக்கி நறுக்கப்பட்ட 5 அல்லது 6

தண்ணீர் – 300 முதல் 400 மில்லி

சர்க்கரை – 2 மேசைக்கரண்டி

உலர வைத்த பிளம்ஸ் – 2

ஐஸ் கட்டிகள்

செய்முறை

முதலில் நறுக்கப்பட்ட அம்பரலங்காய் துண்டுகளை நீர் மற்றும் சர்க்கரையுடன் கலந்திடவும்.

ஐஸ் கட்டி மற்றும் உலர வைத்த பிளம்ஸை சேர்த்து கலக்கவும். இப்போது அம்பரலங்காய் ஜூஸ் தயார்.

நன்மைகள்

அம்பரலங்காயில் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. இது கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது. இம்மரத்தின் இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சாறு கண்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

அம்பரலங்காயில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், உடலில் காணப்படும் கொலஸ்ட்ராலை வளர்சிதை மாற்றத்திற்குள்ளாக்கி பித்தநீர் அமிலங்களாக மாற்றுவதில் உதவி புரிகிறது.

செரிமானத்தை தூண்டக்கூடிய நார்ச்சத்து இப்பழத்தில் காணப்படுவதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அஜீரணம் மற்றும் செரிமான கோளாறுகளை அம்பரலங்காய் குணப்படுத்துகிறது.

இதன் பழம் நீர்ச்சத்து கொண்டதாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவை சரிசெய்கிறது.

அம்பரலம் பழத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, கலோரி ஆகியவை குறைவாக உள்ளன. ஆனால், நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே, இப்பழம் தேவைக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

நச்சுப்பொருள்கள், மாசு ஆகியவற்றின் பாதிப்பிலிருந்தும் உடல் செல்களை காப்பதால், சரும பாதிப்புகள் நேர்வதில்லை. இளமையான தோற்றம் நீடிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டை இப்பழத்திலுள்ள வைட்டமின் சி ஊக்குவிக்கிறது. நோய் தடுப்புக்கான உடல் செயல்பாட்டை இது பலப்படுத்துவதால், நோய்கள், இணை காணப்படாத தனி அயனி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

இரத்த சிவப்பு அணு உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் பி1 மூலம் அம்பரலங்காய் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் உடல் எங்கும் சென்று சேர்வதற்கு இது துணை செய்கிறது.

அம்பரலங்காய் இருமலை குணப்படுத்துவதாகும். தொண்டை வலியின்போது, தொண்டைக்கு இதமளிப்பதோடு குரலில் ஏற்படும் பிரச்னைகளையும் இது சரி செய்கிறது.