முகம் மட்டுமல்லாது நம் சருமம் பொலிவாக மிளிர வேண்டுமென்று அனைவருக்கும் ஆசையிருக்கும்.ஆனால் சிலருக்கு ஒழுங்கான வழிமுறைகள் மற்றும் படிமுறைகள் தெரிவதில்லை.

பெரிதளவான செலவின்றி ,அழகுசாதனமின்றி ,அழகுசாதன நிலையமின்றி விரைவாக சரும பொலிவைத்தரும் பழம் என்னவென்று பார்ப்போம்.

சந்தைகளில் இலகுவாக கிடைக்கக்கூடிய விட்டமின் C சத்து நிறைந்த ஒரு பழம்தான் ஆரஞ்சுப்பழம்.இந்த ஆரஞ்சுப்பழத்தின் தோல் சருமப்பொலிவைத்தரும் என்பது உறுதி செய்யப்பட்ட உண்மை. பல அழகுசாதன நிலையங்களில் இந்த ஆரஞ்சுப்பழத்தின் தோலைத்தான் FACE PACKகாக பயன்படுத்துகின்றனர்.

மாசுபட்டு களையிழந்து கறுத்து இருக்கும் முகங்களுக்கு இது ஒரு அருமருந்தென்றே சொல்லலாம்.

ஆரஞ்சுப்பழதோலை நன்றாக வெயிலில் காயவைத்து பின்னர் அதனை நன்றாக மாவு போல அரைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் அதனுடன் முகத்தில் அதிகம் பரு கொண்டிருப்பவர்கள் முல்தானிமெட்டி சிறிதளவு மற்றும் சிறிதளவு சந்தனம் சேர்த்து முகத்தில் 20நிமிடம் வரை வைத்து கழுவலாம்.

கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்ட ஆரஞ்சுப்பழத்தோல் எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பயன் தரும்.

ஆரஞ்சுப்பழத்தோலுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் 15 முதல் 20நிமிடங்கள் வரை வைத்து காயவைத்து முகத்தை கழுவுங்கள்.

ஆரஞ்சுப்பழத்தோலுடன் தயிர் சேர்த்தும் முகத்தில் பூசலாம்.சிலருக்கு முகத்திற்கு தயிர் பொருந்தாவிட்டால் தயிரை தவிர்க்கவும்.