கருப்பை இல்லாமல் தாம் இப்போது வாழ்ந்து வருவதாக பிரபல சித்தார் இசை ஜாம்பவானான பண்டிட் ரவிசங்கரின் மகளும் இசைக்கலைஞருமான அனுஷ்கா சங்கர் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

கருப்பையில் உருவான கட்டி, ஒருகட்டத்தில் தமது ஆறு மாத காலம் கருவுற்றவர்கள் போன்று இருந்ததாகவும்,

தொடர்ந்து அந்த கட்டியை அகற்றுவதற்காக கருப்பையை அறுவைசிகிச்சை மூலம் நீக்கியதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

மொத்தம் 13 கட்டிகளை நீக்கியதாகவும், அதில் ஒன்று தம்மை சிக்கலில் தள்ளியதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தள பக்கம் ஒன்றில் இது தொடர்பில் விரிவாக பகிர்ந்துள்ள அனுஷ்கா, கருப்பை நீக்கம் செய்வது தொடர்பில் தெரியவந்ததும் மிகவும் வருந்தியதாகவும்,

தமது பெண்மையை தாம் இழந்துவிடுவோமோ என அஞ்சியதாகவும் தெரிவித்துள்ள அனுஷ்கா,

எதிர்காலத்தில் தமக்கு பிள்ளை பெற முடியாது என்ற பயத்தை விடவும், அறுவைசிகிச்சையின்போது தாம் இறந்துவிட்டால், தமது பிள்ளைகள் தாயில்லாமல் வளர்வார்களே என்பதை எண்ணியே வருந்தியதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குடும்ப உறவில் இந்த விவகாரம் ஏற்படுத்தும் மாறுதல்களும் தமது கண் முன்னே வந்து சென்றது என கூறும் அனுஷ்கா,

ஆனால் இந்த விவகராம் தொடர்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசியதில் இருந்து தமக்கு தெளிவான ஒரு பதில் கிடைத்தது என்றார்.

பல பெண்களும் சிக்கலான வாழ்க்கை சூழலில் தங்கள் கருப்பையை அகற்ற ஒப்புக்கொண்டவர்கள் எனவும், ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை என்பது தமது தெரியவந்தது என்றார்.

தமது 26-வது வயதில் கருப்பையில் கட்டி இருப்பதாக முதன் முதலாக தெரியவந்தது என கூறும் அனுஷ்கா,

அதன் பின்னர் தமது இரு ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதில் ஒருமுறை அறுவைசிகிசை மூலம் பிரசவம் நடந்தது என கூறும் அனுஷ்கா,

இதனால் ஏற்பட்ட காயத்தில் பின்னர் நோய் தொற்று ஏற்பட்டு, அது பின்னர் புண்ணானது எனவும், நாளும் மருத்துவமனை சென்று சுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக நினைவு கூர்ந்துள்ளார்.

உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது அதை மனம் திறந்து பேசுவதே நல்ல மருந்து என கூறும் அனுஷ்கா,

பெண்கள் தங்களின் இக்கட்டான சூழல் தொடர்பில் கண்டிப்பாக மனம் திறந்து பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

அனுஷ்கா சங்கரின் இந்த பதிவுக்கு பிரபல நடிகைகள் உட்பட பலர் பதில் அளித்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here