இந்த கால குழந்தைக்கு துரித உணவுகள் என்றாலே ரொம்ப பிடித்த உணவாக மாறிவிட்டது.

அந்தவகையில் உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை என்று சொல்லப்படுகின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

அந்தவகையில் குழந்தைகளுக்கு உண்ணக்கூடாத ஆரோக்கியமற்ற உணவுகள் பற்றி பார்ப்போம்.

பிரட் – ரோல்ஸ் (Bread & Rolls)

ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டில் சோடியத்தின் அளவு மேலும் அதிகரிக்கின்றது. இதனால் ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கின்றது.

ஃபிளேக்ஸ் (Flakes)

‘ஃபிளேக்ஸ்’ வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிற காரணத்தால் குழந்தைகளுக்காக ‘ஃபிளேக்ஸ்’ வாங்கி கொடுப்பதை தவரிக்கவும்.

ஐஸ்கிரீமும் கேக்கும்

ஐஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் இந்த வகையான ஐஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஏனெனில் ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருப்பதால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

பீட்சா

பீட்சாவில் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் உள்ளதால் இவற்றையும் வாங்கி கொடுப்பதை தவர்க்கவும்.

குறிப்பாக எந்த மேல் படுகையும் (toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருப்பதால் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல.

பொரித்த நொறுக்குத்தீனிகள்

‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’ போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.

சோடா

உணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு அவை ஏற்றவையல்ல.

பானங்கள்

உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களை தவிர்ப்பது நல்லது.

பாஸ்தாவும் சிக்கனும்

பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன.

பொரித்த கோழிக்கறி

ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது ஆகும்.

பர்கர்ஸ் (Burgers)

குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. இதனால் பர்கர்களைத் தவிர்ப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here