பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தயிரை பிடிக்கதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

தயிரில் லாக்டிக் அமிலம் அதிகம் இருப்பதோடு, நல்ல பாக்டீரியாவான புரோபயோடிக்குகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

ஒருவர் அன்றாடம் தயிரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பல நன்மைகள் கிடைக்கின்றது என சொல்லப்படுகின்றது.

அதிலும் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் பலமடங்கு பலனை தருகின்றது.

அந்தவகையில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சர்க்கரை கலந்த தயிரை தினமும் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என பார்ப்போம்.

தேவையானவை
 • தயிர் – 1 கப்
 • சர்க்கரை – 1-2 டீஸ்பூன்
 • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து, மதிய உணவிற்கு பின் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் நாவிற்கு விருந்து அளித்தது போன்று இருக்கும்.

நன்மைகள்
 • கோடையில் இப்படி சாப்பிடுவதால், அதிக வேலையால் வியர்வையின் மூலம் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று, சுறுசுறுப்பாக இருக்கலாம்.
 • தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸைத் தடுக்க உதவி, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 • தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்த உதவி, உடலை நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • தயிர் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டதால் எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் கூட இதை சாப்பிடலாம். ஏனெனில் இது நொதிக்கும் செயல்முறையின் போதே, லாக்டோஸை உடைத்துவிடுவதால், எவ்வித பிரச்னையையும் ஏற்படுத்தாது.
 • இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், அன்றாட உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உயர் இரத்த அழுத்த பிரச்னைக்கான அபாயமும் குறைக்கின்றது. இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படும்.
 • தயிரில் உள்ள கால்சியம், இந்த கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து, எடையைக் குறைக்க உவும். மேலும் தயிர் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் கண்ட உணவுகளை உண்பது தடுக்கப்படும்.
 • பெண்கள் அன்றாடம் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால், யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
 • தயிரில் எளிதில் கரையக்கூடிய புரோட்டீன் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
 • தயிர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டுவதால் உடற்பயிற்சிக்கு பின் விரைவில் பாதிக்கப்பட்ட தசைகள் குணமாக உதவும் என்பதால் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடால் நல்லது.
 • தயிரை இதனை அசிடிட்டி பிரச்னை இருப்பவர்கள், வயிற்று எரிச்சலை சந்திப்பவர்கள் மற்றும் உடல் சூட்டால் அவஸ்தைப்படுபவர்கள் அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலம் எளிதில் விடுபடலாம்.
 • தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை சீராக பராமரித்து, குடல் பிரச்னைகளைத் தடுக்கும். மேலும் குடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவியும் புரியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here