இரு தொடு திரைகளைக் கொண்ட மைக்ரோசொப்ட்டின் புதிய சாதனம் ..!

மைக்ரோசொப்ட் நிறுவனம் புத்தகத்தைப் போல் திறக்கக்கூடிய இரண்டு தொடு திரைகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் லேப்டொப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் இரண்டு  திரைகளை (two-screens) கொண்ட சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் (surface duo smartphone) அறிமுகம் செய்யப்பட்டது.

மிகவும் மெல்லிய வடிவில் 5.6 இன்ச் திரைகளைக் கொண்ட இதனை ஸ்மார்ட்போனாக வகைப்படுத்த முடியாது என்றும், இது முற்றிலும் புதிய வகை சாதனம் என்றும் மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

அத்துடன் மைக்ரோசொப்ட் சர்ஃபேஸ் 3 லேப்டொப்  மற்றும் சர்ஃபேஸ் 7 ப்ரோ  டேப்லெட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து சாதனங்களும் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 Views