நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி எடுத்துக் கொள்வது அவசியம்.அதிலும் கிருமிநாசினியை பயன்படுத்தாவிட்டால் காயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு,அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அதே சமயம் அந்த கிருமிநாசினியை எப்படி பயன்படுத்த வேண்டும், இல்லையேல் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

பொதுவாகவே முதலுதவிப் பெட்டிகளில் கிருமிநாசினியான Dettol இருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.இதனை காயத்தில் கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க நாம் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் இந்த டெட்டாலை நாம் நேரடியாக நம் தோலில் தடவினால்,கடும் எரிச்சல் ஏற்படுவதோடு அது நம் தோலை முற்றிலுமாக பாதித்துவிட வாய்ப்பு இ்ருக்கிறது.அதிக அளவில் டெட்டாலை தோலில் தடவி நீண்ட நேரம் எரிச்சல் ஏற்பட்டால், அது ‘கெமிக்கல் லூக்கோடெர்மா’ என்ற நோயையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே,1 லிட்டர் தண்ணீரில் 10ml டெட்டாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எவரேனும் தவறாகப் பயன்படுத்தி கடும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது.அனைத்து மருந்துப்பொருட்களிலும் பின்பக்கம் பயன்படுத்தும் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை படித்துத் தெரிந்துக் கொண்ட பின்னர் மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here