டோனியின் காலம் முடிவடைந்துவிட்டது – தெரிவுக்குழு தலைவர்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியை மறந்துவிட்டு ரிசப் பண்ட் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக இந்திய தெரிவுக்குழுவின் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

2019 உலக கிண்ணப்போட்டிகளின் பின்னர் நாங்கள் ரிசாப் பண்டிற்கு ஆதரவளிக்க ஆரம்பித்துவிட்டோம் நான் இதில் மிகவும் தெளிவாகயிருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றோம் முன்னேற்றங்களை காண்கின்றோம் என பிரசாத் தெரிவித்துள்ளார்.

ர்pசாப் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இதுவரை விளையாடாமலிருந்திருக்கலாம் ஆனால் ஒருவரிற்கு ஆதரவளிப்பதன் மூலம் அவரை சிறந்த வீரராக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ர்pசாப் பண்ட் சிறந்த வீரராக வளர்ச்சியடைவார் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோனியின் காலம் முடிவடைந்துவிட்டது என தெரிவுக்குழுவினர் கருதுகின்றனரா என செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியவேளை  2019 உலக கிண்ணப்போட்டிகளின் பின்னர் நாங்க்ள் ரிசாப் பண்ட் குறித்து கவனம் செலுத்துகின்றோம் என தெளிவாக தெரிவித்துவிட்டேன் என பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இளம் வீரர்களிற்கு வாய்ப்பளித்து அவர்கள் தங்களை தக்க வைப்பதற்கான சூழலை உருவாக்கி வருகின்றோம் என தெரிவித்துள்ள தெரிவுக்குழுவின் தலைவர்  பன்ட் சிறப்பாக விளையாடுகின்றார், சாம்சன் மீண்டும் அணியி;ல் இணைக்கப்பட்டுள்ளார் இதன் காரணமாக நீங்கள் எங்கள் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள் என கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோனியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்  என அவர் தெரிவித்துள்ளார்.