இலங்கை விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டித் தொடரான தேசிய விளையாட்டு விழா இன்று பதுளை வின்ஸ்டன்ட் டயஸ் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

2019 ஆண்டுக்கான  45ஆவது தேசிய விளையாட்டு விழாவை இம்முறை ஊவா மாகாணம் நடத்துகின்றது,  கடும் மழைக்கு மத்தியில் இன்றைய ஆரம்ப விழா நிகழ்வுகள் தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் மழையின் வேகம் குறைய ஆரம்ப நிகழ்வுகள் இயற்கையினால் தடைப்படாமல் நடந்து முடிந்தது.

மகாணா ரீதியாக வீர வீராங்கனைகள் போட்டியிடும் தேசிய விளையாட்டு விழவை நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைப்பதுதான் வழக்கம், அதன்படி இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

இன்றைய ஆரம்ப நிழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோயார் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பித்தில் தேசியக் கொடியுடன் ஒன்று மாகாணங்களின் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டது, அதைனத் தொடர்ந்து அமைச்சர் உட்பட அதிதிகள் வீர வீராங்கைனகளின் அணி வகுபப்பை ஏற்றுக் கொண்டனர், அதனையத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான போட்டிகளை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பல போட்டிகள் ஏற்கனேவ நடைப்பெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது தடகளப் போட்டிகளும் ஓரிரு குழு நிலைப் போட்டிகளுமே நடைப்பெறவுள்ளது.

அதன்படி நாளை ஆரம்பமாகும் தடகளப் போட்டிகளின் முதல் போட்டியாக காலை 8 மணிக்கு பெண்களுக்கான கோளூன்றிப் பாய்தல் போட்டி நடைப்பெறவுள்ளது,

இதில் வழ்க்கமாக வடக்கு மாகாண வீராங்கைனகள் கோளோச்சுவார்கள், அதன்படி 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகளின் முதல் தங்கத்தை யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,

தேசிய விளையாட்டு விழா, பதுளை, பதுளைவிளையாட்டு விழாXLV National Sports Festival

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here