போட்டிகளிலும் பயி;ற்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவருவதாக பங்களாதேஸ் அணி வீரர்கள் அறிவித்துள்ளனர்.

பங்களாதேஸ் கிரிக்கெட்டினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உத்தரவாதம் வழங்கிய பின்னரே பங்களாதேஸ் அணி வீரர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபை அதிகாரிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள சஹீப் அல் ஹசன் எங்கள் வேண்டுகோள்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதுடன் இந்திய சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிகளில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளை புறக்கணிப்பது என பங்களாதேஸ் அணி வீரர்கள் சில நாட்களிற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

பங்களாதேஸ் அணி வீரர்களின் இந்த கோரிக்கை காரணமாக இந்தியாவிற்கான அடுத்த மாத சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியிருந்தது.

பங்காளதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர்கள்  மாநாட்டில் இதனை அறிவித்திருந்தனர்.

அனைத்து முதல்தர மற்றும் தேசிய போட்டிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சர்வதேச போட்டிகளிற்கான தேசிய அணியின் பயிற்சிகளும் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த 11அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றோம். எங்களில் சிலர் நான்கைந்து வருடங்களிற்கும் ஏனைய சிலர் பத்து வருடங்களிற்கும் விளையாடக்கூடும் என தெரிவித்துள்ள அவர்கள்எங்களிற்கு பின்னர் விளையாட வரும் வீரர்களிற்கு நல்லசூழலை ஏற்படுத்தவேண்டும் அதன் காரணமாக பங்களாதேஸ் கிரிக்கெட் முன்னோக்கி நகரலாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here