பிரபல நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.

மலையாள திரையுலகின் கவுண்டமணி என்ற சொல்லும் அளவிற்கு 90களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ஜெகதிஸ்ரீகுமார்.

கடந்த 2015 வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர், ஒரு விபத்தில் சிக்கி கடந்த நான்கு வருடங்களாக நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இவரது மகள் ஸ்ரீலட்சுமி திருமணம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தந்தையான ஜெகதிஸ்ரீகுமார் கலந்துகொள்ளவில்லை.

பெற்ற மகளின் திருமணத்தில் அவர் கலந்த கொள்ளாதது குறித்து சமூகவலைதளங்களில் விவாதம் கிளம்பியது.

இந்நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது ஸ்ரீலட்சுமி, ஜெகதிஸ்ரீகுமாரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் ஆவார்.

1980ல் ஷோபா என்பவரை மணந்து கொண்ட ஜெகதிஸ்ரீகுமார், பல வருடங்கள் கழிந்த நிலையில் 2012ல் கலா என்பவரும் தனது மனைவி தான் என பொதுவெளியில் அறிவித்தார்.

இதன் காரணமாகத்தான் தற்போது ஜெகதிஸ்ரீகுமார் தனது மகள் ஸ்ரீலட்சுமி திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் மணமக்களுடன் ஜெகதிஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி கலாவும் இருப்பது போன்ற ஒரு பெயிண்டிங் ஒன்றை மணமக்களுக்கு பரிசாக ஸ்ரீலட்சுமியின் தாயார் கலா அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here