தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் தன்னுடைய திருமண பத்திரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கொடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆர்யா, விஷால், பிரேம் ஜி ஆகியோரின் வரிசையில் மொரட்டு சிங்கிளாக இருந்தவர் நடிகர் சதீஷ். காமெடியனான இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கிறார்.

இவருடைய நண்பர்கள் ஆன ஆர்யா திருமணம் செய்து கொண்டார். விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதனால் சதீஷிடம் பல முறை நேர்காணலில் உங்கள் நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்துவிட்டது, உங்களுக்கு எப்போ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அவரும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண பத்திரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வதற்கு வழங்கிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் சதீஷ் திருமணம் செய்ய போகும் பெண் சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கை என்பது தெரியவந்துள்ளது. சாச்சியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சதீஷுக்கும், சாச்சியின் தங்கைக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here