தனது மகனை வாகனம் மூலம் இடித்துத் தள்ளிய சாரதி மீது தந்தை கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச்சம்பவம் துலூஸ் (Toulouse) நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனுடன் 45 வயதுடைய தந்தை வீதியில் நடந்து சென்றுள்ளார்.

Balma-Gramont வணிக வளாகத்துக்கு எதிரே உள்ள பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்கும் போது வேகமாகச் சென்ற கார், 6 வயதுச் சிறுவன் மீது மோதியது. இதனால் பத்து மீற்றர் தூரம் வரை அச்சிறுவன் தூக்கியெறியப்பட்டான். இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை வாகனச் சாரதியை கத்தியால் குத்தியுள்ளார்.

கார்ச் சாரதி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டதுடன், மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகனுக்கு இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடந்து தந்தை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 20 வயதுடைய வாகனச் சாரதிக்கு 8 மாத சிறைத்தண்டையை துலூஸ் நகர குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here