கன்னியாகுமரி மாவட்டம் விலவன்கோடு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 33 வயதாகிய லோகநீதி என்பவர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

லோகநீதிக்கும் அவரது மனைவி செல்விக்கும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். எனினும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் லோகநீதி கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் ஈஞ்சம் பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் லோகநீதி வீட்டின் கழிவறைக்கு சென்று திடீரென மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகநீதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மலையம் பாளையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here