தமிழகத்தில் சொக்லேட் வாங்கி தருவதாக சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் நெல் அறுவை இயந்திர ஓட்டுனராக இருந்து வந்துள்ளார்.

சுற்றுவட்டாரா பகுதிகளில் நெல் அறுவடைக்கும் செல்லும் கதிரவன், ஒரு கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாக சிறுமியை கதிரவன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் உடல்நலம் குன்றிய சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது கதிரவன் பாலியல் தொல்லை கொடுத்த விடயத்தை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் கதிரவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.