தஞ்சாவூரில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்கிற 25 வயது இளைஞர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் சத்யா என்கிற 20 வயது வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்ற சந்தோஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் கணவன் கிடைக்காததை அடுத்து, சத்யா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் சந்தோஷ், சசிகலா என்கிற 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு, கிராமத்தில் வசித்து வருவது உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த சத்யா, உடனடியாக அங்கு சென்று சந்தோஷிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

ஆனால் அதற்கு முறையாக பதில் சொல்லாமல் சந்தோஷ், திட்டி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார், சந்தோஷ் மற்றும் சசிகலாவை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சந்தோஷ் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல சந்தோஷ் 8 பெண்களை திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம், நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடுவதை வழக்கமாக வைந்திருந்துள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here