லண்டன் லுசியம் பகுதியில் மதுபோதையில் டாக்சி ஒன்றில் ஏறியுள்ளார் ஒரு இளம் இலங்கை மாணவி.

பெற்றோர் இலங்கைக்கு அவசர தேவையின் நிமிர்த்தம் சென்று விட்ட நிலையில் பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண் வெளியே தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த பல விடயங்களை தனது நண்பியிடம் தொலைபேசியில் உளறிக்கொட்டினாள்.

அந்த வாடகை டாக்சி ஓட்டுனர் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞன் அந்த பெண் பேசிய அத்தனை விடயங்களையும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

புலம்பெயரந்த நாடுகளில் இரவு பகலா குளிரிலும் – பனியிலும் உழைக்கும் ஈழத் தமிழ் பெற்றோருக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தங்களுடைய பெண் பிள்ளைகளையிட்டு அவர்கள் கவனமாகஇருக்கவேண்டும் என்பதற்காகவும் அந்த பதிவை இங்கு பகிர்கின்றோம்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழ் பெற்றோர்களே உங்களுடைய பிள்ளைகளுக்காக பணம், வீடு சொத்துக்களை சேர்க்கிறீர்கள். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஏன் சிந்திப்பதில்லை.

விடுமுறை அல்லது அவசர தேவைகளின் நிமிர்த்தம் கணவன் மனைவி இருவரும் சொந்த நாட்டுக்குச் செல்லும் போது வயதான பெற்றோரை நம்பி எப்படி விட்டுச் செல்கிறீர்கள். இது அவர்களின் தவறல்ல, மாறாக இந்த வயதானவர்களை உங்கள் பிள்ளைகள் ஏமாற்றி விடுகின்றனர்.

அதேபோன்ற சம்பவமே மேலே லண்டனில் இடம்பெற்றுள்ளது, பணம் இருக்கு பொருள் இருக்கு என்பதை விட மானம் இருக்கிறது என்பது தொடர்பில் ஒரு நிமிடம் நீங்கள் சிந்தித்ததுண்டா? அது தொடர்பில் சிந்திக்கும் காலத்தின் காட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

எனவே பிள்ளைகளை வளர்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் கண்டிப்பாக பார்க்கிறோம், பிள்ளைகளை இலங்கையர்களுடன் சேரவிடுவிதில்லை. பிள்ளைகள் வெளிநாட்டவர்களுடன் தான் சேருகின்றார்கள் என்று தம்பட்டம் அடிக்கிறீர்கள். ஆனால் அதன் தாக்கம் எங்கு முடிகின்றது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள்.

எனவே இனிவரும் காலங்களிலாவது சிந்தித்து செயல்படுங்கள். இனத்தைக் காப்பாற்றாமல் விட்டாலும் பரவாயில்லை, உங்களிடம் மண்டியிட்டுக் கேட்கிறோம் உங்கள் குடும்பம் உங்கள் பிள்ளைகளின் மானத்தைக் காப்பாற்றி வெளிநாட்டில் மனிதனாக வாழுங்கள்.

காசு பணம் என்பவை எல்லாம் மானமும் கௌரவமும் இருந்தால் ஒரு மனிதனுக்கு தானாக வந்து சேரும். வேதனையுடன் சொல்கிறோம் முடிந்த வரை நீங்கள் ஒவ்வொரு பெற்றோரும் உங்கள் பிள்ளைகள் மட்டில் விளிப்பாய் இருந்து எதிர்காலத்தை சரிவர செப்பனிடுங்கள்.

தாங்க முடியாத வேதனையினாலேயே உரிமையுடன் இதைக் கொட்டித் தீர்க்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here