வவுனியா பண்டாரிக்குளத்தில் சர்வதேச முதியோர் தின விழா!!

வவுனியா பண்டாரிக்குளம் தந்தை செல்வா பாலர் பாடசாலை மண்டபத்தில் இன்று(01.12) காலை 9.30 மணியளவில் சர்வதேச முதியோர் தினமானது  து.சண்முகராசா (தலைவர் பண்டாரிக்குளம் /  உக்குளாங்குளம் முதியோர் சங்கம்) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் கெளரவ க. சுமந்திரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கெளரவ பூ.சந்திரபத்மன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். எஸ்.ஸ்ரீனிவாசன், உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சு.பரமேஸ்வரன், வவுனியா மாவட்ட மூத்தோர் மேம்பாட்டு உதவியாளர் பி. தனுசியா வவுனியா மூத்தோர் சங்கத்தின் தலைவர் சோ.ஜெகநாதன், மற்றும் பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

முதியோர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டு முதியோர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

77 Views