எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் நேரலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இன்று (02.12.2019) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி அவர்களின் தலமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா , வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் என். கமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மரணமடைந்த வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதுடன் விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக எவ்வாறு மாணவர்கள் செயற்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறுவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் இதில் 50க்கு மேற்பட்ட வவுனியா மாவட்ட சிறுவர் சபையினை சேர்ந்த சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here