நுவரெலியா – வலப்பனை மலப்பத்தாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல்போயிருந்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (திங்கட்கிழமை) காலை சீரான வானிலை நிலவுவதன் காரணமாக வலப்பனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்படி தேடுதல் பணியை ஆரம்பித்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வலப்பனை – மலபத்தாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீட்டிலிருந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் காணாமல்போயிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தேடும் பணிகள் இடம்பெற்றதுடன், குறித்த மூன்று பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.