சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறு ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கண்டி வலப்பனை பிரதான வீதியை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் மழை காரணமாக பலாங்கொடை, இம்புல்பே, கல்லேனகந்த, தம்பகான் ஓயா என்ற நதிக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் பாரிய கற்பாறையுடன் மண்மேடும் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் இந்த வீதியில் வாகனப் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வீதியை செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாக இம்புல்பே பிரதேச செயலாளர் டி.எம்.பி.எஸ்.வட்டுகெதர குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here