முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் அடாத்தாக கட்டப்பட்டிருக் கும் விகாரையில் பிரதிஸ்டை செய்வதற்காக சுமாா் மூன்றரை அடி உயரமான புத்தா் சிலை ஒன் று முல்லைத்தீவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

பாணந்துறையிலுள்ள ஒரு குழுவினரே நேற்று இந்த புத்தர் சிலையை கொண்டு வந்தனர். நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த பிக்குகள் உரிமை கோரியதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், ஆலயத்தின் தற்போதைய நிலைமையை வீடியோ படமும் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் கட்டுமான பணிகளில் ஈடுபடுவதை தடைசெய்துள்ள நீதிமன்றம் வழிபாடுகளிற்கு தடைவிதித்துள்ளது.

தடையை மீறி அண்மையில் பிக்குகளால் அமைக்கப்பட்ட சிசிரிவி அமைப்பையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், நேற்று புத்தர் சிலையுடன் வந்த குழுவினர், ஆலயத்தில் பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

குருகஹந்த ரஜமகா விகாரை, சூரியபுர சமநலபாலம ரஜமகா விகாராதிபதி திருகோணமலை பிரதான சங்க நாயக்கர் கந்தளாய் சோமபுர வித்தியாலயத்தின் முதல்வர் மிகுந்துபுரனதேவ கீர்த்தி ஆகியோர் தலைமையில் வழிபாடுகள் நடந்தன.

எனினும், நேற்று புத்தர்சிலை விகாரைக்குள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பிக்குகளின் தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here