9 வயது சிறு­மியை பாலியல் துன்­பு­றுத்தல் : இரு­வ­ருக்கு விளக்­க­ம­றியல்

யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­துறைப் பகு­தியில் 9 வயது சிறு­மியை  பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­திய குற்றச் சாட்டில் ஆலய பூசகர் ஒரு­வரும் சிறு­மியின் உற­வினர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது,

கடந்த 27 ஆம் திகதி 9 வயது சிறு­மி­யிடம் கைய­டக்கத் தொலை­பேசி இருந்­த­மையை பாட­சாலை ஆசி­ரி­யர்கள் அவ­தா­னித்­துள்­ளனர். இது தொடர்பில் சிறு­மி­யிடம் அவர்கள் விசா­ரணை செய்­துள்­ளனர்.ஆலய பூசகர் ஒரு­வரே அதனை வாங்கி தந்­த­தாக சிறுமி தெரி­வித்­துள்ளார். சிறு­மியின் தக­வ­லை­ய­டுத்து பாட­சாலை ஆசி­ரி­யர்கள் சிறுவர் நன்­ன­டத்தை உத்­தி­யோ­கத்­த­ருக்கு தகவல் வழங்­கி­யுள்­ளனர். அவர்கள் வல்­வெட்­டித்­துறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாட்­டினை பதிவு செய்­தனர். அத்­துடன் சிறு­மி­யி­டமும் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டது.

ஆலயப் பூசகர் வழி­பா­டுகள் முடி­வ­டைந்­ததும் பிர­சாதம் வழங்­கு­வ­தற்­காக தொலை­பேசி ஊடாக அழைப்­ப­தாக சிறுமி பொலி­ஸா­ருக்கு கூறி­யுள்ளார். ஆலய மடப் பள்­ளியில் வைத்து சிறு­மியை அங்க சேஷ்டை செய்­வ­தா­கவும் முறைப்­பாட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதே­போன்று சித்­தப்பா உறவு முறை உடைய ஒரு­வரும் இவ்வாறு நடந்து கொள்­வ­தாக சிறுமி தனது வாக்­கு­மூ­லத்தில் கூறி­யுள்­ளார். மேலும் பிர­சா­தத்­துடன் ஆலய பூசகர் பணம் வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்த சிறுமி, அதனை சேர்த்து வைத்­துள்­ள­தாக தெரி­வித்து பொலி­ஸா­ரிடம் சான்­றா­தா­ர­மாக வழங்­கி­யுள்ளார்.

சிறு­மி­யிடம் இருந்த கைப்­பேசி சிம் அட்டை ஆலய பூச­கரின் பெயரில் இருந்­த­மையைக் கண்­ட­றிந்த பொலிஸார் 72 வய­தான ஆலய பூச­க­ரையும், 50 வயதான சிறுமியின் சித்தப்பாவையும் கைது  செய்து நேற்றுமுன்தினம் நீதி மன்றில் முற்படுத்தினர். இதன்போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தர விடப்பட்டுள்ளது.

57 Views