சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம்.

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒருசிலருக்கு தனது வீட்டில் மட்டுமே பாத்ரூமை பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்கள் சிறுநீரகப் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இன்னும் ஒரு சிலருக்கு வேலை பளு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் கழிக்காமல் அதனை தேக்கி வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தூக்கத்தில் இருக்கும்போது எழுந்து பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில் சிறுநீரை அடக்கி விட்டு தூங்கி விடுகின்றனர். இவை எல்லாம் சிறுநீரகப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகி விடுகின்றன.

சிறுநீரக பிரச்சனையால் நம் உடலில் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

1. சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.

2. சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

3. தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது. இதனால் சிறுநீரகப்பை முற்றிலுமாக சேதம் அடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here