சீனாவின் புதிய முயற்சியான செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.
புதுமையான முயற்சிகளை எடுப்பதில் சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் செயற்கை மழை, செயற்கை நிலவு என்ற வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைத்தல் முறையில்தான் இது போன்ற புதுமைகள் உருவாக்கப்படும்.

இதற்கான முயற்சியை சீன நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கார்பரேஷனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்த பணி தற்போது முடிவடையும் நிலையிலுள்ளது. இரு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வு அணுக்கரு இணைவு ஆகும். இதனால்தான் சூரியனில் ஒளியும் வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அணுக்கரு இணைவை செயற்கையாக உருவாக்கும் வகையில் செயற்கை சூரியன் அமையும்.

டோக்காமாக் ரியாக்டர் என்ற பெயரில் அணுக்கரு உலையை சீனர்கள் உருவாக்கி அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதுவரை சூரியனும் ஒளிரும்.

 

பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். HL- 2M Tokomak என இந்த செயற்கை சூரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என சீன அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சூடான பிளாஸ்மாவை தக்க வைக்க சக்திவாய்ந்த காந்தப்புலமே டோகோமாக் கருவியாகும். இந்த செயற்கை சூரியனில் இந்த கருவி பயன்படுத்தப்படுவதால் டோகோமாக் என பெயரிடப்பட்டுள்ளது.