நம்­மு­டைய வாழ்க்­கையை 1990-க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என இரண்டாகப் பிரிக்­கலாம். 1990-க்குப் பின் நமது வாழ்க்கை முறை இயந்­தி­ர மயமாகி விட்­டது. பெரும்­பாலும் கைபே­சி­யு­டனோ மடிக் கணி­னி­யு­ட­னோதான் அனை­வ­ரு­டைய நேரமும் இன்று கழி­கி­றது.

விளை­யா­டு­வ­தாக இருந்­தாலும் இணை­ய­த­ளத்­தில் தான் பெரும்­பா­லா­ன­வர்கள் விளை­யா­டு­கி­றார்கள். இதனால் பாதிக்­கப்­ப­டு­வது உடல்­நலம் மட்­டு­மல்ல மன­ந­ல­மும்தான்.

அதிக அளவு இணை­ய­த­ளத்தைப் பயன்­ப­டுத்­து­வதும், இணையம் இல்­லாமல் இருக்க முடி­யாது என்­பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்­கம் தான். ஒரு வாரத்­துக்கு 38.5 மணி­நே­ரத்­துக்கும் அதி­க­மாக இணை­ய­த­ளத்தைப் பயன்­ப­டுத்­து­கி­றவர், மன­த­ளவில் அதற்கு அடி­மை­யாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. தற்­போது, இணை­ய­தள உலகம் அசுர வளர்ச்சி அடைந்­துள்­ளது.

இந்த அசுர வளர்ச்­சியோ ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­றத்­துக்கு வழி வகுக்­காமல், இணை­யத்­துக்கு அடி­மை­யான சமூ­கத்­தையே உரு­வாக்­கி ­வ­ரு­கி­றது.

அதி­காலை சூரிய உத­யத்தின் அழ­கையோ குரு­வி­களின் சத்­தத்­தையோ ரசிக்­கக்­கூடத் தெரி­யாமல் இணை­யத்­துக்கு அடி­மை­யாகி வாழ்வின் மகிழ்ச்­சியை இன்­றைய தலை­மு­றை­யினர் தொலைத்து நிற்­கின்­றனர். அக்­கம் ­பக்­கத்தில் என்ன நடக்­கி­றது என்­பது அவர்­க­ளுக்குத் தெரி­யாது.

சாப்­பாட்­டை ­விட இணை­ய­த­ளமே அவர்­க­ளுக்கு முக்­கியம். இணை­ய­த­ளத்­துக்கு எதனால் அடி­மை­யா­கிறோம், எவ்­வாறு அடிமையாகிறோம், எதற்­காக அடி­மை­யா­கிறோம், இணை­ய­த­ளத்­துக்கு அடி­மை­யாகி உள்­ளதை எவ்­வாறு அறிந்­து­கொள்­வது? குறிப்­பாக எந்­தெந்த விட­யத்­துக்­காக இணையதள அடிமையாகிறோம் என்­பது குறித்து ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னையின் மன­நலத் துறை­யினர் சார்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள தொகுப்பு இது

இதனால் உண்­டாகும் பாதிப்­புகள் என்­னென்ன?

 • நேரத்தைக் கையா­ளு­வதில் சிரமம் உண்­டாகும்.
 • பொறுப்­புகள் அனைத்தும் அரை­கு­றை­யாக நிற்கும்.
 • குடும்­பத்­துடன் ஆக்­கப்­பூர்­வ­மாகச் செலவு செய்ய நேரம் இருக்­காது
 • உற­வுகள், கல்வி, வேலை வாய்ப்­பு­களை இழக்க நேரி­டுதல்
 • மன அழுத்தம், பதற்றம்,
 • தாம்­பத்­திய உறவில் நாட்­ட­மின்மை,
 • தற்­கொலை எண்­ணங்கள்,
 • மது­வுக்கும், பிற போதைக்கும் அடி­மை­யாதல்
 • தூக்­க­மின்மை, தேவை­யற்ற எண்­ணங்கள்.

எந்­தெந்த விட­யங்­க­ளுக்­காக இணை­ய­த­ளத்­துக்கு அடி­மை­யா­கிறோம்?

 • தக­வல்­களை அதி­க­மாகத் தெரிந்­து­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக
 • கட்­டுப்­பா­டில்­லாமல் இணை­ய­தள விளை­யாட்­டு­களைக் கணினி அல்­லது செல்­போனில் விளை­யா­டு­வ­தற்­காக
 • இணைய வழி சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தற்­காக
 • இணை­ய­வழி .ெஷாப்பிங் மூல­மாக வித­வி­த­மான பொருட்­களை வாங்­கு­வ­தற்­காக
 • முகநூல், டுவிட்டர் மூலம் கிடைத்த இணை­ய­தள நண்­பர்­க­ளுடன் நீண்­ட­நேரம் உரை­யா­டு­வ­தற்­காக
 • பாலின இன்பக் காட்­சி­களைப் பார்ப்­ப­தற்­காக

யாரெல்லாம் எளிதில் பாதிக்­கப்­படக் கூடி­ய­வர்கள்?

 • கூச்ச சுபாவம் உள்­ள­வர்கள், தங்கள் தாழ்வு மனப்­பான்மை மனக்­கு­றை­களை நிவர்த்தி செய்­து ­கொள்ள பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள்.
 • பெற்றோர் குடும்­பத்­தி­னரின் கவ­னிப்பு இல்­லா­த­வர்கள்.
 • தன்னை அடை­யாளம் காட்­டிக்­கொள்ள விரும்­பா­த­வர்கள்
 • தனிமை விரும்­பிகள்.
 • இதி­லி­ருந்து நாம் எப்­படி மீள்­வது? பிறரை எப்­படி மீட்­பது?
 • மது, போதையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அதி­லி­ருந்து மீட்க நட­வ­டிக்கை எடுப்­பது போல் இணை­ய­தள அடி­மை­க­ளாக சிக்­கி­ய­வர்­க­ளையும் மீட்க முடியும். பாதிக்கப்பட்­ட­வர்­க­ளுக்குக் குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் உதவ வேண்டும்.
 • ஒருவர் இணை­ய­த­ளத்தில் செல­விடும் தின­சரி முறையைக் கண்­டு­பி­டித்து, அதை படிப்­ப­டி­யாகக் குறைக்க வேண்டும்.
 • தொடர்­பு­டை­ய­வரின் அன்­றாடச் செயல்­பாட்டில் அவ­ரது சிந்­த­னையைக் கவரும் வகையில் உள்ள மாற்றுப் பழக்­கங்­களைக் கண்­ட­றிந்து பழக்க வேண்டும்.
 • இணை­ய­தள அடிமைப் பழக்­கத்தால் கை வி­டப்­பட்ட அவ­ரது வாடிக்­கை­யான பழக்­க­வ­ழக்­கங்­களைப் பட்­டி­ய­லிட்டு அவ­ருக்கு அதனை மீண்டும் தொடங்க வலி­யு­றுத்­து­வது.
 • கவ­னிப்பு அல்­லது மேற்­பார்வை இல்­லாதவர்­களைச் சுய­உ­தவி குழுக்­களில் சேர்ப்­பது.
 • குடும்பம் சார்ந்த உறவு முறை பிரச்­சினை களுக்கு சிகிச்சை எடுத்­துக்­கொள்­வது.
 • மன­நிலைப் பிரச்­சி­னை­க­ளுக்கு மருத்­து­வரை அணு­கு­வது.
 • நினை­வூட்டல் அட்­டைகள், இதனால் உண்­டாகும் நன்மை தீமை­களை, தன் கைப்­பட ஒரு அட்­டையில் எழுதி வைத்துக் கொண்டு, அதனை அடிக்கடி படித்து நினைவூட்டிக் கொள்வது.
 • இணையத்தால் பல்வேறு நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் பல வேலைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும்.
 • தேவையில்லாமல் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இணையம் இல்லாமல் இன்றைய உலகம் இல்லை. இணையத்தை மட்டும் உலகமாக நம்பிக்கொண்டிருப்பது தவறு என்பதை உள்ளார்ந்து உணர்வதே இணையதள அடிமை முறையிலிருந்து விடுபடுவதற்கான முதல் வழியாகும்.