பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றான பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக சில புதிய வசதிகளை செய்து பாதுகாப்பினை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதிகள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்தால் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

’சீக்ரெட் உரையாடல்’ பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்புக்கு சமீபத்தில் ‘சீக்ரெட் உரையாடல்’என்ற புதிய வசதியை இணைத்தது. இந்த ‘சீக்ரெட் உரையாடல்’ என்பது முழுக்க முழுக்க பாதுகாப்பானது ஆகும்.

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் தொலைபேசி இலக்கம் கொண்டு பதிவுபெறும் (sign up)  வசதியினை நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது பேஸ்புக் கணக்கினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

பேஸ்புக் மெசஞ்சர் இந்த புதிய விதிமுறை பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளிலும் அடங்கும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது பேஸ்புக் கணக்கை கொண்டு லாக் இன் செய்ய வேண்டியது அவசியம்.

பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தற்சமயம் மெசஞ்சர் சேவையை பேஸ்புக் கணக்கு மூலம் பதிவுபெற்றவர்களுக்கு (sign up)  எந்த மாற்றமும் ஏற்படாது. எந்த மாற்றமும் இருக்காது.

மேலும் கணக்கு இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது. பேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.