அதுபோல் முகநூலில் ஏதாவது பதிவு போடுகிறார் என்றாலும் திரை பிரபலங்கள் பலருக்கும் அள்ளுவிடும். ஏனென்றால் அவர் இதுவரை கூறிய குற்றச்சாட்டுகள் அப்படி.என்ன சாதித்திருந்தாலும் மொத்தத்திற்கும் வேட்டு வைக்கும்படி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி டேமேஜ் செய்துவிடுவார். அவரால் டேமேஜ் ஆனவர்கள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமாக உள்ளனர்.

பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டனர் என முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களையும் வம்பிழுத்தார்.

இந்த நிலையில் சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மாவையும் விளாசி தள்ளியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. இதுதொடர்பாக அவர் முகநூல் பதிவில், ராம்கோபால் வர்மா என்னிடம் சொன்னார், ‘ஸ்ரீ நான் உன் காலை தொட்டேன், நீ ஒரு தேவதை என்றார். ஆனால் தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் வேறொரு பெண்ணின் காலை தொட்டுக்கொண்டிருக்கிறார். நான் வேதனையில் உள்ளேன்’ என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்த ராம் கோபால் வர்மா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ்ந்தாலே போதும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அதிர்ச்சியடைய செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.