இந்திய வரலாறு என்று படிக்க தொடங்கினால் அதில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பெயராக இருப்பது சாணக்கியரின் பெயர்தான். மௌரிய வம்சத்தை அரியணையில் ஏற்றி அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட சாணக்கியர் பல துறைகளில் வல்லவராக இருந்தார். குறிப்பாக அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவயியலில் நிபுணராக இருந்தார்.

வாழ்க்கை குறித்த அவரது கருத்துக்களும், தத்துவங்களும் எப்போதுமே நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு உதவுகிறது. இவர் தனது ஞானத்தை கொண்டு எழுதிய அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி இரண்டும் இந்தியாவின் மிகவும் முக்கியமான நூல்களாக உள்ளது. இந்த நூல்களில் உள்ள கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக இருப்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு. ஏனெனில் காலங்கள் மாகிறதே தவிர மனித இயல்பும், குணமும் எப்பொழுதும் மாறுவதில்லை.

1உதவுதல்

பொதுவாக நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லதுதான் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது கேட்பதற்கு நல்லதாக இருந்தாலும் எதார்த்த வாழ்வுடன் ஒப்பிடும்போது அது உண்மையில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயன்று பிரச்சினையில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம். உதவி செய்வது எப்பொழுதுமே தவறான செயலாகாது ஆனால் யாருக்கும் செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

2துரோகி

உதவி செய்யும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது ஆராய வேண்டும் சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் நமக்கு வேண்டியவர்களாகவே இருந்தால் கூட அவர்களின் குணம் எப்போது மாறும் என்று நம்மால் கூற இயலாது. ஏனெனில் துரோகம் என்பது எப்போதும் எதிரிகளிடம் இருந்து வருவதில்லை, நம்முடன் இருக்கும் நண்பர்களிடம் இருந்துதான் உருவாகிறது. எனவே உதவுங்கள் ஆனால் அவர்கள் உங்கள் உதவிக்கு தகுதியானவர்களா என்று பார்த்து கொண்டு உதவுங்கள். சிலருக்கு உதவி செய்வது உங்களை பிரச்சினைகளில் சிக்க வைக்கும் என்று சாணக்கியர் கணித்து கூறியுள்ளார்.

3சோகமானவர்கள்

காரணமே இல்லாமல் சோகமாக இருப்பவர்களிடம் இருந்தும், தனிமையில் இருப்பவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருப்பதே நல்லது. அவர்கள் எப்பொழுதும் தங்களிடம் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியோ, தன்னிறைவோ அடைய மாட்டார்கள். அனைத்திற்கும் தொடர்ந்து கவலையப்பட்டு கொண்டே இருப்பார்கள். இந்த காரணமில்லா சோகம் தொற்றுவியாதி வியாதி போன்றது, இது உடனிருப்பவர்களையும் சோகமடைய செய்யும். இப்படிப்பட்டவர்கள் உடனிருப்பவர்களின் மகிழ்ச்சியை பார்த்து நிச்சயம் பொறாமைப்படுவார்கள்.

4மோசமான குணம்

அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு சாபமிட்டு கொண்டே இருப்பார்கள், அவ்வாறு சாபமிட காரணம் கிடைக்காத போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வார்கள். இது மிகவும் மோசமான, ஆபத்தான குணமாகும். அப்படிப்பட்டவர்களுடன் இருப்பதோ அவர்களுக்கு உதவுவதோ உங்கள் மனஅமைதியை நிலைகுலைய செய்யும்.

5முட்டாள்கள்

ஒருபோதும் முட்டாள்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சிக்காதீர்கள். உங்களின் அறிவுரை மூலமாகவோ, உதவிகள் மூலமாகவோ நீங்கள் அவர்கள் அறிவை வளர்த்துக்கொள்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது பெரிய தவறாகும். இப்படிப்பட்ட முட்டாள்களுக்கு நீங்கள் செய்யும் அறிவுரையும் புரியாது நீங்கள் செய்யும் உதவிகளும் தெரியாது. நீங்கள் அறிவுரை கூறினால் உங்களிடமே வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கிவிடுவார்கள். இது உங்களின் நிம்மதியை கெடுப்பதோடு உங்களின் நேரத்தையும் வீணாக்கும். மேலும் அவர்கள் உங்களை அவமானப்படுத்துவார்கள். இவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் என்பது விழலுக்கு இழைத்த நீர் போன்றதுதான்.

6ஒழுக்கமில்லாத பெண்

பொதுவாகவே பெண்கள் துயரத்தில் இருந்தால் அதனை பார்த்துக்கொண்டு யாராலும் அலட்சியமாக இருக்க முடியாது. ஆனால் அந்த பெண் உண்மையில் அந்த பெண் மீது எந்த தவறும் இல்லாமல்தான் அவள் சிக்கலில்தான் இருக்கிறாளா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் பெரும்பாலான பெண்கள் துன்பத்தில் இருக்க காரணம் அவர்களின் சில செயல்களாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் யாருக்கும் நேர்மையாக இருக்கமாட்டார்கள். அவர்கள் இயல்பு மோசமானதாக இருக்கலாம். அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முயற்சிப்பது அவர்களுக்கு உதவுபவர்களுக்கு தீரா வலியை உண்டாக்கும்

7சுயஅழிவு

அத்தகைய பெண்கள் தங்களின் சுயநலங்களுக்காகவே ஆண்களை சார்ந்திருப்பார்கள் அல்லது அக்கறை காட்டுவது போல நடிப்பார்கள். அப்படிப்பட்ட பெண்ணிற்கு உதவுவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதோடு உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை இரண்டையுமே ஆபத்தில் சிக்கவைக்கும். இந்த பெண்கள் தங்களுக்கான நரகத்தை தானே உருவாக்குவதுடன் தனக்கு உதவுபவர்களையும் அதில் சிக்க வைப்பார்கள்.

8நேர்மையில்லா பெண்

நேர்மை என்பது அனைவரின் அடிப்படை குணமாகும். நேர்மையில்லாத ஆண்களை ஒருபோதும் உங்கள் பக்கத்தில் அனுமதிக்காதீர்கள். உங்கள் நண்பர் என்ற காரணத்திற்காக ஒரு நேர்மையில்லாத ஆணுக்கு நீங்கள் செய்யும் உதவிகளும், கொடுக்கும் ஆதரவும் உங்களை அவர்கள் செய்யும் பாவங்களின் பங்குதாரராக மாற்றும். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் நேர்மையில்லாத ஆண்களுக்கு ஒருபோதும் உதவிட நினைக்காதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here