சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் கல்வி கற்ற மாணவி ஒருவரின் பேச்சு அனைவரையும் ஈர்த்துள்ளது.

நடிகர் சூர்யா நடத்திவரும் அகரம் அறக்கட்டளையின் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட மாணவி, தனது மூன்று வருட கல்வி பயணம் தொடர்பிலும், துன்பங்களை தாண்டி தான் சாதித்த விதம் தொடர்பிலும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாணவியின் பேச்சை பார்த்த நடிகர் சூர்யா கண்ணீர் மல்கியதுடன் மாணவிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

வறுமையின் மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கு இந்த காணொலி ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்ற இந்த காணொலி உங்கள் பார்வைக்காக…