திருவாரூர் அருகில் கணவரின் கண் முன்னதாகவே மனைவி இறந்து போனதால் மயங்கி கீழே விழுந்த கணவரும் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகில் உள்ள ஒவரூரை சேர்ந்தவர் நாகராஜ் 60 வயதாகிய விவசாயி இவரது மனைவி இந்தியா வயது 55 என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என தெரிகிறது. 

இந்த நிலையிலும் இருவருக்கும் இடையில் இருந்த பாசம் குறையாமல் எந்த விசேஷத்திற்க்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக செல்வது தான் வழக்கம். இதற்கிடையில் நேற்று திடீரென மனைவி இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவசர அவசரமாக அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஆனால் அங்கு முதலுதவி அளிக்கபட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மற்று மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி மனைவி இந்திரா இறந்த நிலையில் கணவர் நாகராஜும் அதே இடத்துல் மயங்கி விழுந்தார். 

ஆரம்பத்தில் சாதாரண மயக்கம் என நினைத்து அவரை மருத்துவர்கள் சோதித்துப் பார்க்க அவர் இறந்து போனதாக தெரிய வந்தது மிரண்டு போன உறவினர்கள் அவர்களது உடலை , சொந்த ஊருக்கு கொண்டு சென்று முறையான சடங்குகளை செய்து பின்னர் நல்லடக்கம் செய்துள்ளனர். இறப்பிலும் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கும் இந்த தம்பதியினர் கண்டு அந்த பகுதி மக்கள் கண் கலங்கி விட்டனர்.