குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இளைஞன் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளான்.

இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் முன் பாய்ந்தே உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளான்.

பருந்துறை பகுதியில் கடை எரிப்பு சம்பவம் குறித்து குறித்த இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.