கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்கன்குளம் பபுகையிரத நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 1.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் உயிரிழந்த முதியவர் தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில் புகையிரத காப்பாளர்கள், புகையிரதத்தில் சடலத்தை ஏற்றிச்சென்றனர்.

மேலும் குறித்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை கொடிகாமம் பகுதியில் ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.