ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், 4 ஈராக் இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயிலில் நின்றிருந்த ஈராக் இராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க படைத் தளத்தின் மீதே நேற்றைய தினம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஈராக்கின் சலாஹூதின் மாகாண பொலிஸார் கூறியதாக வெளியான தகவலின் அடிப்படையில்,

இந்த விமானப்படைத் தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தை விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்ததாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.