பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள தால் எரிமலை வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் மணிலாவுக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தால் எரிமலை கடைசியாக 1977 ஆம் ஆண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் வசித்த 8,000 குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்க்படுகின்றது. குறித்த எரிமலையிலிருந்து லாவா குழம்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது எனவும் தெரிழவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அங்கு 286 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக காற்று மாசு எற்பட வாய்ப்புள்ளதால் வெளியில் பயணிக்கும் மக்கள் அனைவரையும் முகமூடி அணிந்து செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் 1911 ஆம் ஆண்டு தால் எரிமலை வெடித்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். விவாசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.