உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் நோக்கில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

குறித்த பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் காணப்படுவதுடன், மேலும் 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனி நபர்களும் தடைசெய்யப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உண்டு.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருப்பவர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.