முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அலுவகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தை தோண்டிய போது இவ் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் மீட்கப்பட்ட எறிகணைகள் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.