வவுனியா பட்டக்காடு சீதாபிராட்டி ராமர் ஆலய அறநெறி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றையதினம் (13.01.2020) மாலை இடம்பெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் நிதியோதுக்கிட்டில் 30 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்ன அவர்களின் இணைப்பாளர் பிறேம் அவர்கள் கலந்து கொண்டு உதவித்திட்டத்தினை வழங்கி வைத்தார்.

இதன் போது ஆலயம் மற்றும் கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.