வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்தநபரிடமிருந்து கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை பொலிஸார் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று இவரை முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.