சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு வவுனியா பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம் பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா, பண்டாரிக்குளம் மற்றும் உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரினால் உருவாக்கப்பட்ட சிவில் பாதுகப்புக் குழுக்களில் இணைந்து கடந்த ஆண்டு பணியாற்றியவர்களுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி பொலிசாரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் 09 தமிழ் பொலிஸ் உத்தியோகர்தர்களுக்கும் சிவில் பாதுகாப்பு குழுவினரால் கௌரவித்து பிரியாவிடை கொடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அன்வர், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், பொலிசார், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.