மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மீட்கப்பட்ட ஆணின் சடலம் அண்மையில் காணமல்போன கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இதன்போது வெளியிடப்பட்டுள்ளது.