கிளிநொச்சி மாவட்ட இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 20 – 29 வயது பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் கேதீஸ்வரன் பவீந்திரன் 13.69M தூரம் பாய்ந்து 2ஆவது இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here