முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் சரணியா 3ஆம் இடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here