2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் குண்டுதாரியை தாக்குதலுக்கு முன்னதாக தாம் சந்தித்ததாக மட்டக்களப்பு சியோன் தேவாலய போதகர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளித்த சியோன் தேவாலய போதகர் கணேசமூரத்தி திருக்குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 21ஆம் திகதி காலையில் முன்னர் அறிந்திராத ஒருவர் தேவாலயத்துக்கு வந்து வளப் பகுதியை பார்வையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவரிடம் விசாரித்தபோது தாம் தமது சுகவீனமடைந்துள்ள தமது தாய்க்கு பிரார்த்தனை செய்ய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தேவாலயத்துக்குள் அவரை வருமாறு அழைத்த போது அவர் வர மறுத்துவிட்டதாக தேவாலய குரு இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய நெஞ்சுப்பகுதியில் மிகச்சிறிய பை ஒன்று இருந்ததை தாம் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவருடைய தகவல்களை பெறுமாறு சகோதரர் ஸ்டான்ட்லியிடம் கூறிவிட்டு தாம் அங்கிருந்து வெளியேறி ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தெரிந்து கொண்டதாக அவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here