கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தெமட்டகொட – மஹவில பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு குண்டுகள் வெடித்த சம்பவத்தின் காணொளிகள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இது குறித்த சிசிடிவி காணொளிகளை நேற்று வெளியிட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

முதலாவது, சிசிடிவி காணொளி காட்சிகளின் படி, 19.04.2019 அன்று மாலை 6.54 மணிக்கு தெமட்டகொட மஹவில பகுதியில் உள்ள 658/90 என்ற இலக்கத்தினை கொண்ட வீட்டிற்கு கருப்பு நிற கார் ஒன்று வந்து, மீளவும் 7.03 மணியளவில் புறப்பட்டு செல்கின்றது.

காரை விட்டு வெளியேறிய நபர் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த முகமது இப்ராஹிம் இல்ஹாம் அகமது என விசாரணையாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது, சிசிடிவி காணொளி காட்சிகளின் படி 20.04.2017 அன்று இரவு 10.22 மணியளவில் இப்ராஹிம் அகமது ஒரு பையுடன் தெமட்டகொடயில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புகின்றார்.

தற்கொலைதாரியின் சகோதரர் முகமது யூசுப் இஜாஸ் அகமது தனது சகோதரர் நுழைவதற்கான வாயிலை எவ்வாறு திறந்தார் என்பதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகிறன.

அடுத்த சிசிடிவி காட்சிகள் ஏப்ரல் 21ம் திகதி அதிகாலை 1 மணியளவில் தற்கொலை குண்டுதாரிகள் இல்ஹாம் அகமது வீட்டை விட்டு வெளியேறியதையும், சிவப்பு நிற சட்டை மற்றும் தொப்பி அணிந்திருப்பதைக் காட்டுகிறது.

மஹவில பூங்காவில் உள்ள தனது வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்க செய்த இல்ஹாம் அகமதுவின் மனைவி பாத்திமா ஜெஃப்ரி, தனது கணவர் வெளியேறி செல்வதை பார்த்திருப்பதையும் குறித்த காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

அதன்படி, 21ம் திகதி மதியம் 2:30 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இப்ராஹிமின் வீட்டிற்கு வருகின்றனர்.

ரோஹனா பண்டாரா உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதன்போது முதல் குண்டுவெடிப்பு மாதியம் 02.36 மணியளவில் வெடித்தது.

முதல் தாக்குதலுக்குப் பிறகு முகமது இப்ராஹிம் மற்றும் குண்டை வெடிக்க செய்தி பாத்திமா ஜெஃப்ரியின் தாயார் ஆகியயோர் வீட்டில் இருந்து வெளியேறுவதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

முதல் வெடிகுண்டு வெடித்த சுமார் 14 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது குண்டு வெடிக்கின்றது. இந்த குண்டு வெடிப்பு 02.53 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here