தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்பு ஒன்று இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதியளித்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காவல்துறையின் பேச்சாளர் ஜாலிய செனவிரட்ன இதனை இன்று தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்காக பாரியத் தொகை பணம் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் உள்ளூர் குழு ஒன்றினால் தேவாலயங்களை குறிவைத்து கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பில் நடத்தப்பட்டன.

இதற்கு ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அரசு என்ற அமைப்பே உரிமைக்கோரியிருந்தது. எனினும் தாக்குதல்களில் தாம் நேரடியாக ஈடுபடவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்பு ஒன்று பாரிய தொகை பணத்தை தாக்குதல்களுக்காக இலங்கைக்கு பரிமாற்றம் செய்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

அத்துடன் இந்த தாக்குதல்களுக்கு உள்ளூரில் உள்ள வர்த்தகர்களும் நிதியுதவியளித்துள்ளனர் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

சஹ்ரான் ஹாசிமின் தலைமையில் உள்ளூர் தற்கொலைத்தாக்குதல் குழு இயங்கி வந்தது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் முன்னதாக சில சம்பவங்கள் தாக்குதலுடன் தொடர்படுத்தி இடம்பெற்றுள்ளன.

விசாரணையின் முடிவில் இவையாவும் வெளியாகும். அந்த வேளையில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

People who live near the church that was attacked yesterday, leave their houses as the military try to defuse a suspected van before it exploded in Colombo, Sri Lanka April 22, 2019. REUTERS/Dinuka Liyanawatte TPX IMAGES OF THE DAY – RC1390D6CF50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here