வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு நிகழும் சர்வ மங்கள சார்வாரி வருட ஆவணி மாதம் 19ம் நாள் நாளை (04.09.2020) வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணியளவில் துவஜாரோகணமாகிய கொடியேற்றத்தை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்று (13.09.2020) வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக தினமாகிய ஆவணிமாத புனர்பூச நட்சத்தித்தன்று 1008 சங்காபிசேகமும் தீர்த்தோற்சவமும் நடைபெற்று இனிதே உற்சவம் நிறைவுபெறும்.

02ம் திருவிழா தொடக்கம் 08ம் திருவிழா வரை காலை 8.30 மணிக்கு பூசை ஆரம்பமாகி 12.30 மணியளவில் நிறைவு பெறுவதுடன். அத்துடன் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.00 மணிக்கு நிறைவு பெரும்.

வேட்டைத்திருவிழா 10.09.2020 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் உக்குளாங்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வேட்டைத் திருவிழா நடைபெறும். திருவிழா 10 தினங்களும் மகேஸ்வர பூசை (அன்னதானம்) நடைபெறும் எனவும் தினமும்

இன் நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.