கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிடப் பொருட்கள், தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த வவுனியாவிற்கு விஜயம் செய்து வீட்டுத் திட்ட பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினார். 

இன்று (15.09) மாலை வவுனியா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் திருமதி வீ.குரூஸ் மற்றும் வீடமைப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார். 

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இதன்போது வவுனியா மாவட்டத்தில் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள வீடுகளின் விபரம், வீட்டு திட்ட பயனாளிகளின் விபரம் மற்றும் வீட்டுதிட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடியிருந்தார். விரைவில் வீடற்ற மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

அமைச்சருடன் குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன், வவுனியா சிங்கள பிரதேச சபை தலைவர் வசந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here