“பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை விடப் படுமோசமானவர் சிவாஜிலிங்கம். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது.”

  • இவ்வாறு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

நீதிமன்றத்த தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் பயங்கரவாதிகளை நினைவுகூர சட்டத்தில் இடமில்லை. ஆனபடியால் பயங்கரவாதியான திலீபனையும் நினைவுகூர முடியாது. நீதிமன்றமும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இவற்றை மீறிச் செயற்பட்டதால் பொலிஸாரால் சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டார்.

அவர் வடக்கில் கடந்த காலங்களிலும் நீதிமன்றங்களின் தடையுத்தரவுகளை மீறி அடாவடிகளைப் புரிந்துள்ளார்.

சிவாஜிலிங்கம், தான் புலிகளின் உறுப்பினர் என்ற நினைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அவர் பயங்கரவாதிகளைவிட மோசமானவர். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது.

வடக்கில் சிவாஜிலிங்கம் மட்டுமல்ல விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் எனப் பல மோசமான அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நீதித்துறைதான் தண்டனை வழங்க வேண்டும்” – என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Facebook லைக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here