உடல் சூடு அல்லது உஷ்ணம் என்பது நமது உடல் செயற்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக செயற்படுவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கு முக்கிய சக்தியாக உடல் வெப்பம் அமைகிறது.

மனித உடலில் சூடு அதிகமானால் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு பலர் பலவழிகளில் முற்சிசி செய்வர், சில சந்தர்ப்பங்களில் அது வேறுவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது.

பருவகாலநிலை மாற்றம் காரணமாகவே மனித உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. இப்படி உடல் சூடு அதிகமானால் நம் தலைமுடி முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் குறிப்பாக முகப்பரு ஏற்படல், தலைமுடி உதிர்தல், வயிற்றுவலி, தோல் வியாதிகள் மற்றும் உடல் எடை குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக, ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதனை மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்த உடனே அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டு ஆகியவற்றை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இந்த எண்ணெய் சூடு ஆறினதும், இரு கால்களின் பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விடுங்கள்.

2 நிமிடங்கள் கழித்து நகத்தில் தேய்த்த எண்ணெயை கழுவி விட வேண்டும். இதனை செய்யும் போது உடலில்சூடு குறைந்து குளிர்ச்சி அடையும். இதை உங்களால் உணரவும் முடியும். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
2 நிமிடத்திற்கு மேல் நகத்தில் அந்த எண்ணெயை வைத்திருக்க கூடாது. மட்டுமல்லாது சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்.

உஷ்ண உடம்பைக் கொண்டர்கள் மற்றும் மன அழுத்தம் உடையவர்கள் இதனை செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும்.

(சித்தர்கள் தங்களிடம் வரும் குழந்தையில்லாத ஆண்களிடம் உடல் சூடு அதிகமாவதை குறித்து சொல்லி மேற்குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்லி அனுப்புவார்களாம்.)

தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் குளிப்பதற்கு முன்னர் எண்ணெயை தடவிக் கொண்டால் மன அழுத்தம் நீங்கும். அது மட்டுமல்லாமல் உடல் சூடு அதிகமாவதும் குறைக்கப்படும். சிறுவர்களுக்கு வாரத்தில் இரு முறை செய்யலாம். அத்துடன் உடலின் வெளி சூட்டினை குறைப்பதற்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

அடுத்ததாக, உடல் ஏற்படும் அதிக சூடு மற்றும் உடலின் உள்சூட்டை குறைக்க வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அத்துடன் வெந்தயம் ஊற வைத்த நீரையும் குடிக்க வேண்டும்.
மேலும், உடல் சூடை குறைக்க நல்லெண்ணெய் தேக்கரண்டி நல்லெண்ணெயில் 2 பல் பூண்டு, 5 மிளகு சேர்த்து சூடாக்கி இளம் சூட்டில் கால் நகக்கண், உள்ளங்கால், தொப்புள் ஆகியவற்றில் தடவினால் 5 நிமிடத்தில் பலன் கிடைக்கும். உடல் சூடு அதிகமானால் தினமும் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் உடல் சூடு குறையும்.

எண்ணெய் குளியல் மூலம் உங்களுடைய உடல் சூட்டை குறைக்கலாம். வெதுவெதுப்பான குளியல் நீர் உங்களுடைய உடல் உஷ்ணத்தை மிக வேகமாக குறைக்கும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளியுங்கள்.

நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் உண்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முயும். உங்களுடைய உணவு பட்டியலில் குளிர்ச்சி தரக் கூடிய வெள்ளரிக்காய், வெண்பூசணி, புடங்காய், முள்ளங்கி மற்றும் இளநீர் போன்றவற்றினை அதிகம் உணவுப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

அதுபோல ஆண்களுக்கு உடல்சூடு அதிகமானால் நீங்கள் உங்கள் உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளை அதிகம் உங்கள் உணவில் சேர்ப்பது நல்லது.

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் உடல் சூட்டடினைக் குறைப்பதற்க உணவில் விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளான புளிப்புப்பழங்கள் (தோடப்பழம், கிவி, எலுமிச்சை, கொய்யா, ) அதிக சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உடல் சூடு குறைந்து உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.